என் கணவரின் அனுமதியுடனேயே கவர்ச்சிகரமாக நடிக்கிறேன்- ஸ்வேதா மேனன்

|


எனது தொழிலை எனது கணவர் நன்கு புரிந்து வைத்துள்ளார். இதனால்தான் நான் கவர்ச்சிகரமாக நடிக்கவும் அவர் அனுமதி தருகிறார். நானும், எனது கணவரிடம் கூறி விட்டே கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார் மலையாள நடிகை ஸ்வேதா மேனன்.

ஸ்வேதா மேனன் மிகவும் வித்தியாசமானவர். கவர்ச்சிகரமான ரோலில் நடிக்க அவர் சற்றும் தயங்குவதில்லை. இத்தனைக்கும் கடந்த ஜூனில்தான் இவருக்குக் கல்யாணம் நடந்தது. ஆனாலும் இப்போதும் அவர் கவர்ச்சிகரமான பாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டால், சினிமா என்பது ஒரு தொழில். கேரக்டருக்கு கவர்ச்சி தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பதிலும் தவறில்லை. நடிக்கு வந்து விட்டால், இந்த வேடம், அந்த வேடம் என்று பார்க்க முடியாது, பார்க்கவும் கூடாது. எப்படியாக இருந்தாலும் நடிக்க வேண்டும். கவர்ச்சி தேவைப்பட்டால் நடிப்பதில் தவறே இல்லை.

இதை என் கணவர் நன்கு புரிந்து வைத்துள்ளார். எனது முன்னேற்றத்தில் அவருக்கு நிறைய அக்கறை உண்டு. எனக்கு அவரால் என்ன உதவி செய்ய முடியுமோ அதைச் செய்கிறார் என்கிறார் ஸ்வேதா.

ஜாடிக்கேத்த மூடிதான், ஸ்வேதாவுக்கேற்ற கணவர்தான்..!
 

Post a Comment