'நாடோடிகள்', 'ஈசன்' படங்களில் நடித்தவர் அபிநயா. அவர் கூறியதாவது: 'ஈசன்' படத்தை பெரிதும் எதிர்பார்த்தேன். அதில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. தமிழில் சில படங்களில் கதை கேட்டுள்ளேன். நல்ல படம் அமைந்தால், சென்னையில் குடியேறுவேன். அப்பா ஆனந்த் வர்மாவும் சில படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் 'ரிப்போர்ட்டர்' படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன். வேறு படம் ஏற்கவில்லை. தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் தங்கையாக, 'தம்மு', நாகார்ஜூனா தங்கையாக, 'தமரகம்' படங்களில் நடிக்கிறேன். தொடர்ந்து தங்கையாக நடிப்பேனா என்று சொல்ல முடியாது. ஹீரோயின்தான் என் முதல் சாய்ஸ்.
Post a Comment