40,000 பாடல்களுக்கு மேல் பாடி திரையுலகில் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக சிறந்த பிண்ணனி பாடகராக திகழ்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். நடிகர், பிண்ணனி பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்டவர், இப்பொழுது இயக்குனர் என்ற முகத்தை காட்ட காத்திருப்பதாக தெரிகிறது. ஆந்திராவில் உள்ள காகிநாடாவில் மருத்துவமனை திறப்புவிழா ஒன்றிற்கு சென்றிருந்த பாலசுப்ரமணியம், தெலுங்கு படம் ஒன்றை இயக்கவிருப்பதாக நிரூபர்களிடம் தெரிவித்திருக்கிறார். தற்போது அவர் "கோபுரம்" என்ற தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
Post a Comment