பிரதமர் விருந்தில் தனுஷ் ‘ஒய் திஸ் கொலை வெறிடி" பாடலை பாடுகிறார்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரதமர் மன்மோகன் சிங் தரும் விருந்தில் நடிகர் தனுஷ் பங்கேற்கிறார். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் '3' படத்தில் நடிக்கிறார் தனுஷ். இப்படத்துக்காக அவர் பாடிய 'ஒய் திஸ் கொலை வெறிடி' பாடல் சர்வதேச அளவில் பிரபலமாகி உள்ளது. மும்பை, கொல்கத்தா என வெவ்வேறு நகரங்களில்  நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அப்பாடலை பாடி வருகிறார் தனுஷ்.
இந்நிலையில் நாளை, புதுடெல்லியில் ஜப்பான் நாட்டு பிரதமர் யாஷிஹிகோ நோடாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் விருந்து அளிக்கிறார். இவ்விருந்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள தனுஷுக்கு அழைப்பு வந்துள்ளது. அதையேற்று தனுஷ் கலந்து கொள்கிறார். விழாவில் 'ஒய் திஸ் கொலை வெறிடி' பாடலை அவர் பாடுவார் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி தனுஷ் கூறும்போது, ''எந்த மொழி பாடலையும் நான் பாட தயார். கொலை வெறி பாடல் அந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தி தந்திருக்கிறது. கொலை வெறி பாடல் ஹிட்டானதற்கு 3 காரணங்கள் உண்டு. அப்பாடலில் உள்ள ஆங்கில வார்த்தைகள், நகைச்சுவை உணர்வு, எல்லா இளைஞர்களும் பாடுவதற்கு ஏற்றாற்போன்ற எளிமை'' என்றார். கொல்கத்தா சென்றிருந்த தனுஷ் இன்று டெல்லி வருகிறார். அங்கு தேசிய தொலைக்காட்சிக்காக நடக்கும் விழாவில் பங்கேற்கிறார். நாளை பிரதமர் தரும் விருந்தில் கலந்துகொள்கிறார்.


 

Post a Comment