ராஜீவ் மேனனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இந்தியா முழுவதும் உண்டு. இந்திய சினிமாவில் பி.சி.ஸ்ரீராம், பாலமகேந்திரா போன்ற ஒளிப்பதிவாளருக்கு தனி ரசிகர்கள் கூட்டம். அந்த வரிசையில் ரவி.கே.சந்திரனும், ராஜீவ் மேனன் இடம் பெறுவார்கள். தமிழில் 'மின்சார கனவு' மற்றும் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படங்களை இயக்கினார். இந்த படங்களுக்கு பிறகு, பாலிவுட் சென்ற ராஜீவ் மேனன், 7 வருடங்கள் கழித்து மீண்டும் கோலிவுட் பக்கம் வருகிறார். அதுவும் மாஸ் படத்தில். ராஜீவ் மேனனுக்கு 2 பெரிய படங்கள் உள்ளன. ஒன்று, மணிரத்னம் இயக்கும் 'பூக்கதை' மற்றொன்று சூப்பர் ஸ்டாரின் 'கோச்சடையான்'.
Post a Comment