கதையை மாற்றினார் சித்தார்த் கால்ஷீட் மறுத்தார் சமந்தா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கதையை கேட்டு ஒப்பந்தம் போட்ட பின், கதையை மாற்றியதால் படத்திலிருந்து ஹீரோயின் சமந்தா வெளியேறினார். தெலுங்கு இயக்குனர் நந்தி ரெட்டி படம் ஒன்றை இயக்குகிறார். இதில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார் என்று ஹீரோயின் சமந்தாவிடம் கதை சொன்னார். கதை பிடித்திருந்ததால் சமந்தா ஒ.கே சொன்னார். பிறகு சித்தார்த்திடம் கதையை சொன்னார் நந்தி ரெட்டி. அவர் கேரக்டரை விட, சமந்தாவின் கேரக்டர் சிறப்பாக இருந்ததாம். இதை ஏற்காத சித்தார்த், சமந்தா கேரக்டரில் சில மாற்றங்களை சொன்னதாகவும் அதை செய்தால் மட்டும் நடிப்பேன் என்று கூறியதாகவும் தெரிகிறது.

இதையடுத்து கதையை மாற்றினார் இயக்குனர். விஷயம் கேள்விபட்டு மீண்டும் கதையை கேட்ட சமந்தாவுக்கு ஷாக். முதலில் சொன்னதற்கும் இப்போதைய கதைக்கும் அதிக வித்தியாசம். இதையடுத்து நடிக்க மறுத்தார் சமந்தா. இதுகுறித்து தயாரிப்பாளர் பெல்லங்கொண்டா சுரேஷ், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். 'முதலில் நடிக்க ஒப்புக்கொண்டு அக்ரிமென்ட் போட்டார் சமந்தா. ஷூட்டிங் தொடங்கும் நேரத்தில் நடிக்க முடியாது என வெளியேறிவிட்டார்' என்றது அவர் புகார் மனு.

இதையடுத்து விசாரித்த தயாரிப்பாளர் சங்கம், 'இயக்குனரும் ஹீரோயினும் முதலில் கதை விஷயத்தில் சமரசமாக பிரச்னையை முடித்துக்கொள்ளுங்கள். பிரச்னை முடியும்வரை மீடியாவிடம் கருத்து சொல்லக் கூடாது' என்று கூறியுள்ளது.இதுபற்றி சமந்தா தரப்பில் விசாரித்தால், 'நடிக்க அவர் ரெடியாகவே இருக்கிறார். ஆனால், முதலில் சொன்ன கதையை மட்டுமே படமாக்க வேண்டும்' என்று தெரிவித்தனர். பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டிருக்கிறது.


 

Post a Comment