'காதலில் சொதப்புவது எப்படி?' என்ற படம் மூலம் தயாரிப்பாளர் ஆகிறார் சித்தார்த். 'பாய்ஸ்' படம் மூலம் அறிமுகமான சித்தார்த், இப்போது தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு '180' படத்தில் தமிழில் நடித்தார். இதையடுத்து 'காதலில் சொதப்புவது எப்படி?' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அமலா பால் ஹீரோயின். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். பாலாஜி இயக்குகிறார். இந்தப் படம் தெலுங்கில் 'லவ் ஃபெயிலியர்' என்ற பெயரில் உருவாகிறது. இதை இடாகி என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் மூலம் சித்தார்த் தயாரிக்கிறார். ஒய் நாட் மூவிஸ் நிறுவனம் இணை தயாரிப்பு செய்கிறது.
Post a Comment