லெஸ்பியன் படத்தில் நடித்தது துணிச்சலான முடிவு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
லெஸ்பியனாக நடித்தது நான் எடுத்த துணிச்சலான முடிவு என்றார் நந்திததாஸ். தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை நந்திதாதாஸ். இவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: பெண்களுக்கிடையேயான நெருக்கமான உறவை மையப்படுத்தி உருவான படம் 'பயர்'. என்னுடைய முதல் படமான இதில் நான் லெஸ்பியனாக நடித்தது துணிச்சலான முடிவு. இதில் நடித்தது பற்றி சர்ச்சை எழுந்தது. அதுபற்றி கவலைப்படவில்லை. பாலிவுட்டை பொறுத்தவரை வர்த்தக ரீதியிலான படங்கள்தான் வருகின்றன. மக்கள் பிரச்னைகளை மையமாக வைத்து துணிச்சலான கதை அம்சங்களுடன் ஒரு சில படங்கள்தான் வருகிறது. அதனடிப்படையில் உருவான படம்தான் பயர்.

நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் எல்லாவற்றையும் ஒப்புக்கொள்வதில்லை. மக்களிடையே உள்ள பிரச்னைகளை எடுத்து சொல்லும் சில கதைகளை பெரும்பாலானவர்கள் தவிர்த்து விடுகிறார்கள். அதுபோல் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். சினிமா என்பது வாழ்க்கையை பிரதிபலிப்பது. மக்கள் பிரச்னைகளை மையமாக கொண்ட படங்களில் நான் நடித்துள்ளேன் என்ற திருப்தி இருக்கிறது. இப்போதும் அதுபோன்ற கதைகளுக்காகத்தான் காத்திருக்கிறேன்.


 

Post a Comment