'எங்கேயும் காதல்', 'வேலாயுதம்' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது சிம்புவுடன் 'வேட்டை மன்னன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற ஹன்சிகா, படப்பிடிப்பு இடைவேளையில் ஷாப்பிங் செய்வதற்காக அண்ணா சாலையில் உள்ள வர்த்தக வளாகத்துக்கு சென்றார். ஒரு கடைக்குள் நுழைந்த அவர் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். மெல்ல மெல்ல கடை எதிரே கூட்டம் கூடியது. சில ரசிகர்கள் கடைக்குள் புகுந்தனர். சிலர் அவருடன் கைகுலுக்க முயன்றனர். சிலர் ஆட்டோகிராப் வாங்க முந்தினர். இதனால் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கீழே விழுந்தன. கண்ணாடி பொருட்கள் உடைந்தன. 'பொருட்களை வாங்கிக் கொண்டு சீக்கிரம் இடத்தை காலி பண்ணுங்கள்' என்று அவசரப்படுத்தினார் கடைக்காரர். அங்கிருந்த செக்யூரிட்டிகள், கூட்டத்தை கட்டுப்படுத்தி ஹன்சிகாவை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
Post a Comment