போலீஸ் மீது தாக்கு : நடிகர் கலாபவன்மணி மீது வழக்கு!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் சொந்த ஊர் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியாகும். அங்குள்ள குடாப்புழா முருகன் கோயிலில் காவடி திருவிழா நடந்தது. இதில் நடிகர் கலாபவன் மணியும் கலந்து கொண்டார். சாலக்குடி- ஆதிரப்பள்ளி சாலையில் காவடி ஊர்வலம் செல்லும்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த  போலீஸ்காரர் உமேஷ் வாகனங்களுக்கு வழிவிடுமாறு கூறியுள்ளார். இதற்கு விழா குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நடிகர் கலாபவன் மணி உமேஷை பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் மீது   போலீஸ்காரரை தாக்கியதாக  வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.


 

Post a Comment