'கழுகு' படத்தில் நடித்துள்ள பிந்து மாதவி கூறியதாவது: தமிழில் 'வெப்பம்' படத்தில் அறிமுகமானேன். இதையடுத்து கிருஷ்ணா ஜோடியாக 'கழுகு' படத்தில் நடித்துள்ளேன். கனமான வேடம். மேக்கப் போடாமல் நடித்திருக்கிறேன். என் நடிப்பை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு அமைந்தது. இது ரிலீசான பின், தமிழ் ரசிகர்கள் என்னை கவனிப்பார்கள். இப்போது தெலுங்கில் 'போகா' படத்தில் நடிக்கிறேன். தமிழில் நல்ல வேடம் அமையும் என்று காத்திருக்கிறேன்.
Post a Comment