நல்ல இயக்குனர்கள் நடிகர்களுக்கு வரம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
லிங்குசாமி இயக்கும் படம் 'வேட்டை'. மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலாபால் நடிக்கிறார்கள். அடுத்த மாதம் வெளிவருகிறது. படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் மாதவன் கூறியதாவது:
பத்து வருடத்துக்கு முன்பு நானும் லிங்குசாமியும் இணைந்து பணியாற்றினோம். சாக்லெட் ஹீரோவாக இருந்த என்னை 'ரன்' மூலம் ஆக்ஷன் ஹீரோவாக ஆக்கினார். பிறகு பல படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறேன். எத்தனையோ பெரிய இயக்குனர்களிடம் பணியாற்றி இருந்தாலும் சொன்ன கதையை அப்படியே படம் எடுப்பவர் லிங்குசாமி.

சினிமாவை நேசிக்கும் இயக்குனர்கள் கிடைப்பது நடிகர்களுக்கு வரம் கிடைத்த மாதிரி. எனக்கு கிடைத்த வரம் லிங்குசாமி. இந்த படத்துக்கு அவர் அழைத்தபோது காலில் அடிபட்டிருக்கிறது, ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க முடியாது என்றேன். அப்படியானால் இந்தப் படத்தை எடுக்கவில்லை என்றார். என்மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்காக நடித்தேன். படத்தில் ஆர்யாவின் அண்ணனாக நடித்தாலும் நிஜத்திலும் அண்ணனாக மாறிவிட்டேன். அந்த அளவுக்கு அன்பானவர் அவர். எனக்கு 'ரன்' படம் மாதிரி அவருக்கு இந்தப் படம் அமையும். அவரும் நானும் போட்டிப் போட்டு நடித்தோம். சமீரா ரெட்டி எனக்கு பொருத்தமான ஜோடிகளில் ஒருவர். அமலா பாலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் படம். இவ்வாறு அவர் கூறினார்.


 

Post a Comment