ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ கதைகள் அடிக்கடி வருகின்றன. தமிழில் முதன்முறையாக சூப்பர் ஹீரோ கதையாக உருவாகிறது 'முகமூடி'. மிஷ்கின் இயக்குகிறார். இதில் ஜீவா ஹீரோ. 'சித்திரம் பேசுதடி', 'நெஞ்சிருக்கும் வரை', 'அஞ்சாதே' உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்த நரேன் முதன்முறையாக வில்லன் வேடத்தில் நடிக்கிறார். கடந்த ஆண்டு 'மிஸ் இந்தியா' போட்டியில் 2ம் இடம் பிடித்த அழகி பூஜா ஹெக்டே ஹீரோயின். இந்த படத்துக்காக ஜீவா, நரேன் இருவரும் ஹாங்காங் சென்று 3 மாதம் குங்பு பயிற்சி பெற்றனர். இருவரும் மோதிக்கொள்ளும் குங்பு காட்சி ஹைலைட்டாக பேசப்படும் வகையில் அமைக்க முடிவு செய்துள்ளார் மிஷ்கின். கே என்ற புது இசை அமைப் பாளர் இசை அமைக்கிறார். சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜீவாவுக்காக பிரத்யேகமான உடையை ஹாங்காங்கில் உள்ள காஸ்டியூம் டிசைனர்கள் உருவாக்கி உள்ளனர். இதன் ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீஸ்.
Post a Comment