பாலிவுட்டுக்கு செல்லும் கோலிவுட் இயக்குனர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கௌதம் மேனன், சுசிகணேசன் என செல்லும் அந்த பட்டியலில், தற்போது கே.வி.ஆனந்த்தும் சேர்ந்துள்ளார். 'கோ' படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு சூர்யா வைத்து 'மாற்றான்' படத்தை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். இந்த படம் முடிந்த பிறகு, ரன்பீர் கபூரை வைத்து படம் ஒன்றை இயக்கப் போகிறார் கே.வி.ஆனந்த். அதே போல் 7ஆம் அறிவு ரீமேக்கிலும் நடிக்க இந்தி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நம்ம தனுஷூம் இந்தியில் அடுத்து ஆண்டு அபிஷேக் மற்றும் அமிதாப்பை வைத்து படம் இயக்கலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது. இதனால் பாலிவுட்டின் பார்வை முழுவதும் கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது.
Post a Comment