ஆண்டு இறுதியை குறி வைத்து பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆண்டின் இறுதி வெள்ளிக்கிழமையில் ஏராளமான படங்கள் வெளிவரும், அந்த ஆண்டின் விருது, மற்றும் மானியப் பட்டியலில் சேர்வதற்காகவும், பொங்கலுக்கு பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவரும் என்பதாலும் சிறிய படங்கள் வெளியாகும். அந்த வகையில் வரும் வெள்ளிக்கிழமை பதினெட்டான்குடி, அன்புள்ள துரோகி, மகாராஜா, காற்றாய் வருவேன், கருத்த கண்ணன் கேர் ஆப் ரேக்ளா ரேஸ், வழிவிடு கண்ணே வழிவிடு, தப்பு கணக்கு, மகான் கணக்கு ஆகிய 8 படங்கள் வெளிவர இருப்பதாக அறிவித்துள்ளன. இது தவிர 'ஸ்பீட் 2012', 'புயல்வீரன்' என்ற ஆங்கில படங்களும், 'அபாயம்' என்ற தெலுங்கு மொழிமாற்று திரைப்படமும் வெளிவருகிறது. கடைசி நேரத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். 10 நேரடி தமிழ்ப் படங்களும் 5 மொழிமாற்று படங்களும் வெள்ளிக்கிழமை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment