ரமேஷ் தான்ட்ரா தயாரிக்கும் படம், 'இஷ்டம்'. விமல், நிஷா அகர்வால் ஜோடி. பிரேம் நிஸார் இயக்குகிறார். அவர் கூறியதாவது: சுவிட்சர்லாந்தில் விமல், நிஷா பங்கேற்ற 'நானின்று நானாய் இல்லை' பாடல் காட்சியைப் படமாக்கினோம். கீழே இருந்து ஐஸ் மலைக்குச் செல்ல, 60 கி.மீ பயணித்தோம். 4 ரோப் கார்களில் சென்று வந்த அனுபவம் த்ரிலிங்காக இருந்தது. ஜேம்ஸ்பாண்ட் படமான 'டுமாரோ நெவர் டைஸ்' ஷூட்டிங் ஏற்கனவே இங்கு நடந்திருக்கிறது. ஐஸ் மலையின் உச்சிக்குச் சென்ற நாங்கள், கடுங்குளிரில் ஷூட்டிங் நடத்தினோம். ஐஸ் மலையில் மூவாயிரம் அடி ஆழத்தில் ஒரு மரண பள்ளத்தைப் பார்த்து விமல், நான், நிஷா மற்றும் பட யூனிட் அதிர்ந்தோம். ஒருபுறம் ஐஸ் உருகி வழிய, நாங்கள் நின்ற இடம் முழுவதும் அப்படியே சரிந்தது. இடுப்பளவு வரை புதைந்தோம். இனி மீள முடியுமா என்று நினைக்கும்போது, அதிர்ஷ்டவசமாக ஐஸ் உருகுவது நின்றது. இதையடுத்து வேகவேகமாக தப்பி வந்தோம்.
Post a Comment