இன்டர்நெட்டில் கொலை மிரட்டல் : தமிழர்களுக்கு எதிரான நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டோம்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வெளிநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என்று கொலை மிரட்டல் விடுப்பதாக, நடிகை சங்கீதாவும், அவரது கணவர் பாடகர் கிரிஷும் பரபரப்பு பேட்டி அளித்தனர். நடிகை சங்கீதாவும், அவரது கணவரும் பாடகருமான கிரிஷும், ஜனவரி 1ம் தேதி சுவிட்சர்லாந்தில் தனியார் அமைப்பு நடத்தும் புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் ஆண்டுதோறும் புத்தாண்டு விழா நடத்தும் இன்னொரு தமிழ் அமைப்பு, சங்கீதா கலந்து கொள்ளும் விழாவின் அமைப்பாளர், இலங்கை அரசின் ஆதரவாளர் என்றும் அவர் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்றும், இணைய தளத்தில் செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து சங்கீதாவும், கிரிஷும் இலங்கை அரசின் ஆதரவுடன் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள் என்ற வதந்தி பரவியது. இதுகுறித்து, இருவரும் நேற்று நிருபர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு இதே அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அப்போது எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. இந்த ஆண்டு திடீரென பல புரளிகளை கிளப்பி விடுகிறார்கள். விழா நடத்தும் அமைப்பினர், தாங்கள் இலங்கை அரசின் ஆதரவாளர்கள் இல்லை. தமிழ் உணர்வாளர்கள்தான் என்பதை ஆதாரத்துடன் எங்களுக்கு விளக்கி கூறிய பிறகே, நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதித்தோம். இப்போது, எதிர் அமைப்பினர் தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இதை உண்மை என்று நம்பி பலரும் எங்களை போனிலும், இணைய தளத்திலும் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இதனால், கடந்த பத்து நாட்களாக, நிம்மதி இழந்து விட்டோம். நாங்கள் கலைஞர்கள். எங்களுக்கு அரசியல் தெரியாது. இருந்தாலும் தமிழர்களுக்கு எதிரான எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டோம். இதுதொடர்பாக நடிகர் சங்கத்துக்கும், போலீசுக்கும் தகவல் சொல்லியிருக்கிறோம்.  இவ்வாறு இருவரும் கூறினர்.


 

Post a Comment