கௌதம் மேனனின் முதல் படமான 'மின்னலே' முதல் 'வாரணம் ஆயிரம்' படம் வரை கௌதம்-ஹாரிஸ் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருந்தது. இதனிடையே திடீரென இவர்கள் கூட்டணி பிரிந்தது. இனி கௌதம் மேனனுடன் இணைப் போவதில்லை என்று ஹாரிஸ் கூறியதாக தெரிகிறது. அதன் பின், இசைப்புயல் ஏ,ஆர்.ரகுமானுடன் கூட்டணி வைத்தார் கௌதம் மேனன். இதுவும் வெற்றி கூட்டணியாக அமைந்தது. இதனையடுத்து, தான் இயக்கும் அடுத்து படமான 'நீ தானே என் பொன்வசந்தம' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானை தேர்வு செய்தார் கௌதம். ஆனால் படு பிசியாக ரகுமான் இருப்பதால், அடுத்த முறை இசையமைக்கிறேன் என்று கூறிவிட்டாராம். தற்போது வேறு வழியில்லாமல் தனது முன்னாள் சகா ஹாரிஸையே நாடியிருக்கிறார் கௌதம். ஹாரிஸூம் உடனே இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். கௌதமின் மகன் பிறந்த நாளில் பழைய கசப்புகளை இருவரும் களைந்துவிட்டதாகத் தெரிகிறது.
Post a Comment