"ஒய் திஸ் கொல வெறி" பாடலுக்காக சூப்பர் ஸ்டாரை அனுகிய ஷாரூக்?

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா.ஆர்.தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் '3'. '3' படத்தின் 'why this kolaveri di' என்ற பாடல் பட்டிதொட்டி முதல் சிட்டி வரை பட்டையை கிளிப்பிக் கொண்டிருக்கிறது. இந்த பாடல் பாலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. பாலிவுட் டிவி ஷோக்களிலும் 'why this kolaveri di' பாடல் இல்லாமல் நிகழ்ச்சிகள் நடப்பதே இல்லை. தற்போது இந்த பாடல் உரிமம் பெற பாலிவுட்டில் பெரும் போட்டியே நடந்து வருகிறது. பாடலை ஷாரூக் கான் வாங்க விருப்பட்டு தயாரிப்பாளரை அனுகியதாகவும், ஆனால் அதற்கு முன்பே அக்ஷய குமார் வாங்கிவிட்டதாக தயாரிப்பாளர் கூறியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து, எப்படியாவது உரிமமத்தை பெற்றிட வேண்டும் என நினைத்த ஷாரூக், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுகியதாகவும் கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது.



 

Post a Comment