சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக ராதிகா தேர்வு!

|


சென்னை: சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகை ராதிகா சரத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக் குழு கூட்டத்தில் ஒருமனதாக அவரை தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தனர்.

அவருக்கு சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். பின்னர் பேசிய ராதிகா, "தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு, ஒரு சில தொலைக்காட்சி நிறுவனங்கள், சம்பளபாக்கி வைத்துள்ளன. எனவே அந்த நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது" என்றார்.
 

Post a Comment