'டான் 2' படம் மூலம் ஆக்ஷன் ஹீரோயின் ஆகிவிட்டேன் என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறினார். 'டான் 2' இந்தி பட விளம்பர நிகழ்ச்சிக்காக ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா ஐதராபாத் வந்தனர். அப்போது பிரியங்கா சோப்ரா கூறியதாவது: இந்தியில் ஷாருக்கானுடன் நடித்துள்ள 'டான் 2' படம் தமிழ், தெலுங்கு மொழியிலும் டப்பிங் செய்யப்படுகிறது. ரூ.82 கோடி செலவில் இப்படம் உருவாகி உள்ளது. பர்ஹான் அக்தர் இயக்கி இருக்கிறார். இம்மாதம் படம் ரிலீஸ். இப்படத்தில் ஹீரோ ஷாருக்குக்கு மட்டுமின்றி, எனக்கும் ஆக்ஷன் வேடம். இதன்மூலம், நான் ஆக்ஷன் ஹீரோயின் ஆகிவிட்டேன். ஏற்கனவே 'தமிழன்' படம் மூலம் ரசிகர்களை மகிழ்வித்த நான் பல வருட இடைவெளிக்கு பிறகு 'டான் 2' மூலம் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்தால் நடிப்பேன்.
Post a Comment