ட்விட்டரில், தன் பெயரில் போலி கணக்கு தொடங்கியுள்ள மர்மநபர் பற்றி, த்ரிஷா புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: என் ட்விட்டர் பக்கத்தை இதுவரை 2 லட்சம் பேர் தொடர்கிறார்கள். ஒரு வகையில் இது சந்தோஷமென்றாலும் இன்னொரு வகையில் அதிர்ச்சியாக இருக்கிறது. எனது ட்விட்டர் ஐடி tக்ஷீவீsலீtக்ஷீணீsலீமீக்ஷீs. ஆனால் க்ஷீவீsலீணீtக்ஷீணீsலீமீக்ஷீs என்ற ஐடியில் யாரோ ஒருவர் என்னை போலவே ட்விட்டர் பக்கம் தொடங்கி நடத்துகிறார். நான் என்னவெல்லாம் என் பக்கத்தில் எழுதுகிறேனோ, அதை அப்படியே காப்பி செய்து போடுகிறார். நான் பேசுவதுபோல ரசிகர்களிடம் பேசி, தவறான தகவல் அளிக்கிறார். சமீபகாலமாக இது தொந்தரவாக இருக்கிறது. 'ட்விட்டரில் இப்படி சொல்லியிருக்கிறாயே' என்று நெருங்கிய தோழிகள், உறவினர்கள் வட்டாரத்தில் கேட்கிறார்கள். நான் அது இல்லை என்று விளக்கம் அளிக்கிறேன். அந்த மர்ம நபர் இப்போது இன்னும் கொஞ்சம் ஓவராக சென்று, இரண்டு ட்விட்டர் பக்கமும் என்னுடையதுதான் என்று நானே சொல்வது போல தெரிவித்திருக்கிறார். இது இன்னும் அதிர்ச்சியாக உள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருக்கிறேன். இவ்வாறு த்ரிஷா கூறினார்.
Post a Comment