சார்ஜா நட்சத்திர கிரிக்கெட் - த்ரிஷா தூதர்?

|


சார்ஜாவில் நடக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு விளம்பரத் தூதராக த்ரிஷாவை நியமிக்க பேச்சு நடக்கிறது.

தமிழ், இந்தி, கன்னடம், மலையாள நடிகர்களின் நட்சத்திர 20 ஓவர் கிரிக்கெட் போட்டியான சிசிஎல் சார்ஜாவில் வரும் ஜனவரி 13-ந்தேதி துவங்குகிறது. பெங்களூர், மும்பை, சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத்தில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தி நடிகர்கள் அணிக்கு சல்மான்கானும், தமிழ் நடிகர்கள் அணிக்கு சூர்யாவும் கேப்டன்களாக உள்ளனர்.

தெலுங்கு அணிக்கு ஜுனியர் என்.டி.ஆரும், மலையாள நடிகர்கள் அணிக்கு மோகன்லாலும் கேப்டன்களாக உள்ளனர். ஒவ்வொரு அணியும் பிரபல நடிகைகளை விளம்பர தூதுவர்களாக ஒப்பந்தம் செய்துள்ளன. இந்தி நடிகர்கள் அணிக்கு சோனாக்ஷி சின்ஹா, ஜெனிலியா, கங்கனா ரணாவத் ஆகியோர் தூதுவர்களாகியுள்ளனர்.

ஸ்ரேயா தெலுங்கு அணிக்கும், பாவனா, லட்சுமிராய் ஆகியோர் மலையாள அணிக்கும் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் நடிகர்கள் கிரிக்கெட் அணியில் ஜெயம்ரவி, ஸ்ரீகாந்த், அப்பாஸ், ஜெய் உள்ளிட்ட பலர் இடம் பெற்று உள்ளனர். இந்த அணியின் தூதுவராக திரிஷாவை ஒப்பந்தம் செய்ய பேச்சு நடக்கிறது.

இதனை த்ரிஷாவும் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "என்னை தூதுவராக ஒப்பந்தம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மைதான். ஆனால் நான் தமிழ், தெலுங்குப் படங்களில் பிஸியாக உள்ளேன். ஷூட்டிங் தேதிகளில்தான் இந்த கிரிக்கெட் போட்டிகளும் நடக்கின்றன. அதுதான் பிரச்சினை. பார்க்கலாம்," என்றார்.
 

Post a Comment