ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரிக்கும் படம், 'அபாயம்'. கிருஷ்ண வம்சி 'டேஞ்சர்' என்ற பெயரில் தெலுங்கில் இயக்கிய இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி நிருபர்களிடம் ஷெரீன் கூறியதாவது: ஒரு காட்டுக்குள் நான், நரேஷ், ஸ்வாதி உட்பட 5 பேர் அடைக்கலமாகிறோம். அப்போது ஒரு குழந்தையின் நரபலி காட்சியை வீடியோவில் படமாக்குகிறோம். அமைச்சர் ஒருவர் அதை செய்கிறார். வீடியோவைக் கைப்பற்ற அமைச்சர் எடுக்கும் முடிவுதான் கதை. தமிழில் ஏன் இடைவெளி என்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் பெயின்டிங் சம்பந்தமான படிப்பை தொடர்ந்தேன். பெங்களூரிலுள்ள வீட்டில் ஓவியங்கள் வரைந்து வைத்திருக்கிறேன். விரைவில் கண்காட்சி நடத்த உள்ளேன். படம் இயக்கும் ஆசை இருக்கிறது. இதற்காக வெளிநாடு சென்று படிக்க திட்டமிட்டுள்ளேன். எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒருவரையும் காதலிக்கவில்லை. இதுவரை யாரை பார்த்தும் காதல் எண்ணம் வரவில்லை. தமிழ் ரசிகரை திருமணம் செய்வீர்களா என்கிறார்கள். அதில் என்ன தவறு? தமிழ் ரசிகரை மணப்பேன்.
Post a Comment