கே.வி.டி.ஆர் கிரியேட்டிவ் ரீல்ஸ் சார்பில் லோகநாதன் தயாரிக்கும் 3டி படம் 'அம்புலி'. பார்த்திபன், அஜெய், ஸ்ரீஜித், சனம் உட்பட பலர் நடிக்கிறார்கள். 3டி படம் என்பதால் அதற்கான கண்ணாடி தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர்கள் ஹரி ஷங்கர், ஹரீஷ் நாராயணன் கூறியதாவது: டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தமிழில் வரும் முதல் 3டி படம் இதுதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவ ரையும் கவரும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. சில மர்மமான நிகழ்வுகளை அமானுஷ்ய சக்தி என்று மக்கள் நினைத்து நடுங்குகிறா£ர்கள். அவற்றில் உள்ள உண்மை என்ன என்று நாயகனும் நாயகியும் கண்டுபிடிப்பது கதை. தமிழ் நாட்டின் பெரும்பான்மையான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். 3டிக்கென்று தனியாக உள்ள தியேட்டர்களில் கண்ணாடி அவர்களே வைத்திருப்பார்கள். பொதுவான தியேட்டர்களுக்காக முதல் கட்டமாக 10 லட்சம் கண்ணாடிகள் தயாரித்து வருகிறோம். படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து 50 லட்சம் கண்ணாடிகள் வரை தயாரிக்க தயார் நிலையில் இருக்கிறோம்.
Post a Comment