'மழைக்காலம்' படத்தில் வசனம் இல்லாமல் 20 நிமிட கிளைமாக்ஸ் இடம் பெறுகிறது. ஏ.ஆர்.ஸ்க்ரீன் சார்பில் ஏசுதாசன், ராஜன் தயாரிக்கும் படம், 'மழைக்காலம்'. ஸ்ரீராம், சரண்யா நாக் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் எஸ்.தீபன் கூறியதாவது: சென்னை ஓவியக் கல்லூரியில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம். ஓவியக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சொன்ன செய்தியின் அடிப்படையிலும் பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளின் அடிப்படையிலும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஓவியக் கல்லூரியில் படமாக்கப்பட்டு அந்த மாணவர்களே நடித்தும் உள்ளனர். படத்தின் 20 நிமிட கிளைமாக்சில் வசனம் கிடையாது. பின்னணி இசை மட்டுமே இருக்கும். இதற்கு பெரிய இசை அமைப்பாளர் வேண்டும் என்று இளையராஜாவை அணுகினோம். நேரமின்மையால் அவரது கால்ஷீட் கிடைக்கவில்லை. அதனால் பிரபல மலையாள இசை அமைப்பாளர் ஜான்சனை கொண்டு பின்னணி அமைத்தோம். 20 நிமிட காட்சிக்கு ஒரு வாரம் எடுத்துக் கொண்டு பின்னணி இசை அமைத்துக் கொடுத்தார். இசை அமைத்த சில நாட்களிலேயே அவர் இறந்து விட்டார். இதுவே அவருக்கு கடைசி படமாக அமைந்துவிட்டது.
Post a Comment