'ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டைக் கொண்டாட வெளிநாடு செல்வது வழக்கம். இந்த வருடம் கோவாவில் கொண்டாடினேன்' என்று த்ரிஷா கூறினார். அவர் கூறியதாவது: 2011ம் வருடம் எனக்கு நல்லதாகவே அமைந்தது. ஆனால், என் திருமணம் பற்றி தவறான தகவல்கள் வந்தன. இப்போது என் திருமணத்துக்கு அவசரம் இல்லை. நடக்கும்போது கண்டிப்பாக அனைவருக்கும் தெரிவிப்பேன். தமிழில் விஷாலுடன் 'சமரன்', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் 'தம்மு' படங்களில் நடிக்கிறேன். தவிர தமிழ், தெலுங்கில் உருவாகும் ஒரு படத்தில், முன்னணி ஹீரோவுடன் நடிக்கிறேன். இந்த வருட புத்தாண்டை கோவாவில் கொண்டாடினேன்.
Post a Comment