கனவுக் கன்னிகள்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இவர்கள்தான் இந்த ஆண்டு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் ஆட்டிப் படைக்கப் போகும் தேவதைகள். கடைசி நேரத்தில் மின்னலென யாராவது புகுந்து இவர்கள் அனைவரையும் ஓரம் கட்டி விடக் கூடும். அதற்காக நாக்கை தொங்க விட்டபடி காத்திருப்பதை விட, கிடைத்திருக்கும் இலுப்பை பூக்களை சர்க்கரையாக நினைப்பது மேல். அதனால்தான் லட்சுமி கடாட்சம் படைத்த பாக்கியவான்கள், இந்த ஏஞ்சல்ஸை இந்த ஆண்டுக்கான கனவுக் கன்னிகளாக முன்னிறுத்தி இருக்கிறார்கள். இவர்களை நம்பித்தான் ஃபைனான்சியர்களும் முதலீடு செய்திருக்கிறார்கள்.

'நம்ம' சூப்பர் ஸ்டாரான ரஜினியின் ஸ்டைலுக்கு குரு என இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவை சொல்லலாம். அவரது அத்யந்த புத்திரி

தான் சோனாக்ஷி சின்ஹா. 'தபங்' என்ற ஒரேயொரு படத்தின் வழியே துருவ நட்சத்திரமாக மாறியிருக்கும் இவரை, இந்தி நடிகர் அக்ஷய் குமார் மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார். விளைவு, இவர்கள் காம்பினேஷனில் இந்தாண்டு 3 படங்கள் வெளிவர இருக்கின்றன. தவிர, சல்மானுடன் 'கிக்'கும் சதமடிக்க காத்திருக்கிறது. ஒருவேளை சொன்ன தேதியில் கமலின் 'விஸ்வரூபம்' ஷூட்டிங் தொடங்கியிருந்தால், சோனாக்ஷி இந்த வருடமே தமிழ்ப் படத்தில் நடித்திருப்பார். ஜஸ்ட் மிஸ். பழைய கதைகளை பேசி பயனில்லை. நடப்புக்கு வருவோம். நடப்பாண்டில் தமிழில் இவர் அறிமுகமாக கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.

வாரிசு நடிகையாக இருந்த போதும், ஸ்ருதி ஹாசனின் ப்ளஸ் பாயிண்ட், 'நம்ம வீட்டு பெண் மாதிரி இருப்பதாக' ஒவ்வொருவரையும் நினைக்க வைப்பதுதான். பாடத்தெரியும், ஆடத் தெரியும், நடிக்கவும் தெரியும் என எல்லா ஏரியாக்களிலும் சிக்ஸர் அடிக்கும் ஸ்ருதிக்கு, தெலுங்கும், இந்தியும் காலை வாறினாலும் தமிழ், கோபுரத்தில் அமர வைத்திருக்கிறது. ரிலீஸாகப் போகும், '3', அவரது புகழை எட்டுத் திசையிலும் பரப்பட்டும்.

தீக்ஷை தரும் வல்லமை படைத்த தீக்ஷா சேத், 2009ம் ஆண்டு மிஸ்.இந்தியா போட்டியில் பங்கேற்றவர். ஏணி மீது ஏறாமலேயே பரணில் உள்ள பொருளை எடுக்கும் அளவுக்கு உயரம். அதற்கேற்ற உடல் வாகு. தெலுங்கு, தமிழ் என விமானத்தில் பறந்தபடி சேவை செய்யும் இந்த அரபிக் குதிரை, டூயட் பாடவும், கதாநாயகர்களால் காப்பாற்றப்படவும், ஈஷிக் கொண்டு வெளிநாடுகளில் சுற்றுவதற்காகவுமே பிறவி எடுத்தவர். எனவே ஹீரோயிச திரையுலகில், இவருக்கென்று ஓர் இடம் கட்டாயம் உண்டு.

அல்டிமேட் ஸ்டார் அஜீத்தின் ஜோடி என்ற ஒரே பெருமையுடன் தமிழ்கூறும் நல்லுலகை ஆட்டிப் படைக்க வருகிறார் பார்வதி ஓமனக்குட்டன். 1987ல் பிறந்த இவர், 2008ம் ஆண்டின் மிஸ்.இந்தியா மகுடத்துக்கு பெருமை சேர்த்தவர். 'பில்லா 2'&ன் நாயகி. கேரளத்து செழுமைகள் அனைத்தையும் தன்னுள் கொண்டிருக்கும் இந்த பார்வதியின் அருள் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் இப்பொழுதே தவம் செய்யத் தொடங்கிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

பாலைவனமாக வறண்டிருக்கும் இளைஞர்களின் வாழ்வில் பாலை ஊற்ற வந்திருக்கும் தேவதைகளே… உங்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்!   

 

Post a Comment