இன்று பெப்சி பொதுக்குழு கூட்டம் : மீண்டும் தமிழ் படப்பிடிப்புகள் தொடங்குமா?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'பெப்சிக்கும் எங்கள் சங்கத்துக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை. தயாரிப்பாளர்கள் தங்கள் இஷ்டப்படி யாரை வேண்டுமானாலும் வைத்து தொழில் செய்து கொள்ளலாம்Õ என்று திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நேற்று அறிவித்துள்ளது. இதனையடுத்து பெப்சி சங்கம் சார்பில் அவரச பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள தீர்மானம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. இன்று எடுக்கப்படும் முடிவை பொறுத்தே மீண்டும் தமிழ் படப்பிடிப்புகள் தொடங்குமா என்பது தெரிய வரும். முன்னதாக, இந்த பிரச்சனை தொடர்பாக நேற்று ஒரு நாள் முழுவதும், தமிழ் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

முன்னதாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் பிலிம்சேம்பர் தியேட்டரில் நேற்று நடந்தது. 300க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மூன்று நாட்களுக்கு முன் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சார்ந்த சங்கங்கள், தன்னிச்சையாக ஒரு ஊதிய உயர்வை நிர்ணயம் செய்து, பத்திரிகைகள் வாயிலாக அறிவித்து விட்டார்கள். வழக்கமாக, தயாரிப்பாளர்கள் சங்கமும் தொழிலாளர்கள் சம்மேளனமும் கலந்துபேசி அனைத்துப் பிரிவுகளுக்கான கையொப்பம் ஆனபிறகுதான் அது ஒப்பந்தம் எனப்படுகிறது.

அதை மீறி அவர்கள் தன்னிச்சையாக ஊதிய உயர்வை நிர்ணயம் செய்து அறிவித்திருப்பது அந்த நடைமுறை வழக்கத்தை மீறிய செயலாகும். ஆகவே, இனி எங்கள் சங்கத்துக்கும் தொழிலாளர் அமைப்புக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை. எங்கள் சங்கத்தின் தயாரிப்பாளர்கள் தங்கள் இஷ்டப்படி யாரை வேண்டுமானாலும் வைத்து தொழில் செய்து கொள்ளலாம். இதற்கு உடன்பட்டு தொழில் செய்ய வரும் தொழிலாளர்களுக்கு எங்கள் சங்கம், குழு அமைத்து அவர்களது ஊதியத்தை நிர்ணயம் செய்து அதை அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் அறிவித்து கண்டிப்பாக அதை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தும். அதை மீறும் தயாரிப்பாளர்களுக்கு எங்கள் சங்கம் எந்த ஒத்துழைப்பும் அளிக்காது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


 

Post a Comment