ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் 'தங்கம்' தொடர், சன் டி.வியில் ஒளிபரப்பாகிறது. இதில் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை, போட்டிகள் மூலம் அவர் தேர்வு செய்து வருகிறார். 'சின்த்தால் சரும பாதுகாப்பு சீசன் 2' என்ற பெயரில் 2வது முறையாக இப்போட்டிகள் நடந்தது. கோவை, மதுரை, திருச்சி, சென்னையில் நடந்த முதற்கட்டப் போட்டியில், 15 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான இறுதிப்போட்டி சென்னையில் நடந்தது. தனி நடிப்பு, இணைந்து நடிப்பு, பொது அறிவு என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சென்னையைச் சேர்ந்த பிரவீணா, பிரசாந்தி வெற்றிபெற்றனர். இவர்களுக்கு 'தங்கம்' தொடரில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இப்போட்டிக்கு ரம்யா கிருஷ்ணன், காவேரி, இயக்குனர் டி.பி.கஜேந்திரன், நிதின் சத்யா நடுவர்களாக இருந்தனர். கோத்ரெஜ் பிராண்ட் மேனேஜர் சின்மயி கேன்கர், பி.ஆர்.சுபாஷ், ஸ்ரீனிவாச அய்யர், டாக்டர் முருகுசுந்தரம் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விஷன் புரோ மேனேஜ்மென்ட் செய்திருந்தது.
Post a Comment