தனிஷா இன்டர்நேஷனல் சார்பில் எஸ்.முத்து தயாரிக்கும் படம், 'பாரி'. ராகுல், பீனா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ரஜினி இயக்குகிறார். அருள்தேவ் இசை. இதன் பாடல்களை வெளியிட்டு கே.பாக்யராஜ் பேசியதாவது: தொழில்நுட்ப வளர்ச்சி சினிமாவை எளிமையாக்கி உள்ளது. அதனால் நிறைய புதுமுக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வருகிறார்கள். தமிழ் சினிமாவில்தான் அதிகமான புதுமுகங்கள் வருகிறார்கள். என்றாலும் புதுமுகங்களின் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதிலும், அதை விளம்பரப்படுத்துவதிலும், மக்களை வரவைப்பதிலும் சிக்கல் இருக்கிறது. அதை தயாரிப்பாளர் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் இணைந்து தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், தயாரிப்பாளர் சங்க செயலாளர் தேனப்பன், கலைப்புலி சேகரன், மனோஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment