வடிவேலுக்கு வாய்ப்பு கொடுத்த தனுஷ்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இம்சை அரசன் 23ம் ‌புலிகேசி, அறைஎண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிம்புதேவன் தனுஷை வைத்து மாரீசன் என்று படத்தை இயக்குகிறார். கி.மு., 12ம் ‌நூற்றாண்டை தழுவிய கதை என்பதால் இப்படத்திற்கு ரூ.30 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. கதையைக் கேட்ட யுடிவியின் உரிமையாளர்களான வால்ட் டிஸ்னி நிறுவனத்தினர், இக்கதை ஆங்கிலப் படங்களின் பாணியில் பிரமாதமாக உள்ளது எனவும் தாராளமாக எடுங்கள் எனவும் பாராட்டினார்களாம். தனுஷ் அதிக பட்ஜெட்டில் நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது முதல்முறையாக தனுஷ் படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடிவேலுவுடன் நடிப்பதில் ஏதும் தயக்கம் உண்டா என தனுஷிடம் இயக்குநர் கேட்டதற்கு, தாராளமாக நடிக்க வையுங்கள். எனக்கு அதில் மகிழ்ச்சியே என்றாராம் தனுஷ். விஷயம் கேள்விப்பட்டு தனுஷுக்கு வடிவேலு நன்றி கூறியதாகச் சொல்கிறார்கள்.


 

Post a Comment