புவியரசி சினி பிளானர் சார்பில் ரவி சீனிவாஸ் ஒளிப்பதிவு செய்து தயாரிக்கும் படம், 'லொள்ளு தாதா பராக் பராக்'. மன்சூர் அலிகான் தாதாவாக நடிக்கிறார். அவரே பாடல்கள் எழுதி இசை அமைத்துள்ளார். ஜோடியாக புதுமுகம் ஷில்பா நடிக்கிறார். படம் பற்றி இயக்குனர் வியாசன் கூறியதாவது: இந்தியில் வெளிவந்த பிரபல காமெடி படமான 'குல்லுதாதா ரிட்டன்ஸ்' என்ற படத்தின் ரீமேக் இது. கடனை கொடுத்து விட்டு அதைத் திருப்பி வாங்க படாதபாடுபடும் காமெடி தாதாவின் கதை. அந்த வேடத்தில் மன்சூர் அலிகான் நடிக்கிறார். அவர் தவிர, இளம் ஹீரோ, ஹீரோயினும் நடிக்கிறார்கள். படத்தின் பாடல் காட்சிகள் ஊட்டியிலும் மற்ற காட்சிகள் சென்னையிலும் படமாக்கப்பட்டு வருகிறது. பாடல் காட்சியில் நடித்தபோது மன்சூர் அலிகான் கையெலும்பு உடைந்து சிகிச்சை பெற்று வருவதால், அவர் இல்லாத காட்சிகளை படமாக்கி வருகிறோம். படத்தில் பத்துக்கும் மேற்பட்ட காமெடி நடிகர்கள் நடிக்கிறார்கள்.
Post a Comment