சினேகா-பிரசன்னா திருமணம் ஜூன் மாதம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி பிரசன்னாவிடம் கேட்டபோது கூறியதாவது: திருமண விஷயம் பற்றி ஆளாளுக்கு ஏதோ சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை. எல்லா மீடியாவையும் முறைப்படி அழைத்து திருமண தேதி பற்றி அறிவிப்பேன். பிப்ரவரி முதல் வாரத்தில் நானும், சினேகாவும் இணைந்து அறிவிக்க இருக்கிறோம். தற்போது ரஜினியுடன் 'கோச்சடையான்', சரத்குமாருடன் 'விடியல்' படங்களில் நடிக்கும் சினேகா, விரைவில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். திறமையான நடிகைகளில் சினேகாவும் ஒருவர். வித்தியாசமான கேரக்டரில் மட்டுமே நடிக்க விரும்புகிறார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து அவர் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். அவர் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், நடிப்புக்கு முழுக்கு போட நான் சொல்லவில்லை. இவ்வாறு பிரசன்னா கூறினார்.
Post a Comment