ஒய் ஜி மகேந்திரன் நடித்த புதிய நாடகத்தைப் பார்த்துப் பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

|


ஒய் ஜி மகேந்திரன் நடித்த புதிய நாடகத்தைப் பார்த்துப் பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

சென்னை வாணி மகாலில் வியாழக்கிழமை மாலை இந்த நாடகம் நடந்தது. மனைவி லதாவுடன் வந்திருந்த ரஜினி, நாடகத்தை முழுவதுமாகப் பார்த்தார்.

பின்னர் ஒய்ஜி மகேந்திரன், அவரது மகள் மதுவந்தி உள்பட நாடகக் குழுவினரைப் பாராட்டினார்.

உடல்நிலை சரியான பிறகு, அவர் கலந்து கொள்ளும் மூன்றாவது வெளி நிகழ்ச்சி இதுவே. ரஜினியைப் பார்க்க அரங்கிலிருந்தவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பியவர்களை அருகில் அழைத்து போஸ் கொடுத்த ரஜினி, குழுவினரையும் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வைத்தார்.

ரஜினி மனைவி லதாவும் ஒய்ஜி மகேந்திரன் மனைவி சுதாவும் உடன் பிறந்த சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment