மலையாளத்தில் அறிமுகமாக இருக்கும் கிஷோர் கூறியதாவது: தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளேன். ஏற்கனவே மலையாளத்தில் நிறைய அழைப்பு வந்தது. மொழி தெரியாததால் மறுத்தேன். ஆனால், ஜெயராம் நடிக்கும் 'திருவம்பாடி தம்புரான்' கதையைக் கேட்டபோது, நடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இது எனக்கு முதல் மலையாளப் படம். ஷூட்டிங் ஸ்பாட்டில் வசனங்களை மலையாளத்தில் சொல்வதைக் கேட்டு நடித்து வருகிறேன். ஜி.என்.ஆர்.குமரவேலன் தமிழில் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். எனக்கும், ஒரு குழந்தைக்கும் இடையேயான பாசத்தை, சொல்லும் படம். விரைவில் ஷூட்டிங் தொடங்குகிறது.
Post a Comment