கவுதம் மேனன் படத்தில் வாய்ப்பை தவறவிட்டதால் சிம்பு ஹீரோ ஆனார்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கவுதம்மேனன் படத்தில் வாய்ப்பை தவறவிட்டதால் சிம்பு ஹீரோவானார் என்றார் ஜெய். இதுபற்றி அவர் கூறியதாவது: வளரும் இயக்குனர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் என்பது என் ஆசை. சவாலான கதைகள் வைத்திருக்கும் உதவி இயக்குனர்கள், ஹீரோக்கள் கிடைக்காமல் காத்திருக்கிறார்கள். என்னுடைய ஹிட் படங்கள் பெரும்பாலும் புது இயக்குனர்கள் படங்கள்தான். இனிவரும் படங்களிலும் அதுபோன்ற இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருவேன். உதவி இயக்குனர்களின் விருப்பமான ஹீரோவாக நான் இருப்பதில் மகிழ்ச்சி. 'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்குனர் கவுதம் மேனன் பார்த்து என்னை பாராட்டினார். இருவரும் விரைவில் இணைந்து படம் செய்வோம் என்றார். அதன்படி அவர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். பிரபுதேவா உதவியாளர் இயக்குகிறார். அதேநேரம் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிப்பதற்காக எனது உடல்கட்டை ஏற்ற ஜிம் செல்கிறேன். இதுவொரு ஆக்ஷன் படம்.

திருநெல்வேலியில் ஒருமுறை ஷூட்டிங்கில் இருந்தபோது கவுதம் மேனன் என்னை அழைத்தார். நேராக தனது அலுவலகத்துக்கு சென்று தான் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுமாறு கூறினார். வெளியூரில் இருந்ததால் செல்லவில்லை. அது 'விண்ணை தாண்டி வருவாயா' படம் என்பது பின்னர்தான் தெரிந்தது. வாய்ப்பை தவறவிட்டதால் அதில் சிம்பு நடித்தார். அஞ்சலியுடன் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். நான் அவரை தவிர்க்கவில்லை. தயாரிப்பாளர்களே வதந்திகளுக்கு பயந்து அவரை என் படத்திலிருந்து தவிர்க்கிறார்கள். மேலும் அஞ்சலி பிஸியாக இருக்கிறார். என் படங்களில் நடிக்க அவரால் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை.


 

Post a Comment