மின்வெளி மீடியா ஒர்க்ஸ் சார்பில் தனபால் பத்மநாபன் இயக்கி, தயாரித்துள்ள படம், 'கிருஷ்ணவேணி பஞ்சாலை'. இதில் ஹேமச்சந்திரன், நந்தனா ஜோடி. என்.ஆர்.ரகுநந்தன் இணீசை. வைரமுத்து, தாமரை பாடல்கள். இதன் பாடல்களை இயக்குனர் மகேந்திரன் வெளியிட, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெற்றார். படம் பற்றி தனபால் பத்மநாபன் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் 1970 மற்றும் 80-களில் நடந்த பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றிய கதை. இதனால் இதில் நடிக்க புதுமுக நடிகை நந்தனாவுக்கு ஒரு மாதம் வரை படத்தின் காஸ்ட்டிங் டைரக்டர் சண்முகராஜன் பயிற்சி அளித்தார். இதன் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள மில் ஒன்றில் நந்தனா, அங்குள்ள பெண்களோடு பஞ்சாலையில் வேலை பார்த்தார். அங்கு பணியாற்றும் பெண்களின் உடல்மொழி, பேச்சு வழக்கு வரவேண்டும் என்பதற்காக வேலை செய்ய வைத்தோம். அவரும் செய்தார். உடன் பணியாற்றிய பெரும்பாலான பெண்களுக்கு அவர் நடிகை என்பது தெரியாது. பயிற்சி முடிந்து அதே மில்லில் ஷூட்டிங் நடந்தபோதுதான் அவர்களுக்கு விவரம் தெரிந்தது. ஷூட்டிங் முடிந்துவிட்டது. பின்னணி இசை சேர்ப்பு பணி நடந்து வருகிறது.
Post a Comment