படத்தில் ஜோடியாக நடித்தவர்கள், நிஜவாழ்வில் ரகசிய திருமணம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சேலம் நியூ மாடர்ன் பிலிம் மேக்கர்ஸ் சார்பில், 10 பேர் இணைந்து தயாரிக்கும் படம், 'நீ எனக்காக மட்டும்'. புதுமுகம் தமிழ், ஸ்ரீலட்சுமி ஜோடி. கே.பி.சக்திவேல் இயக்குகிறார். கதைப்படி தமிழ், ஸ்ரீலட்சுமி காதலிக்கின்றனர். எதிர்ப்பை மீறி, திருமணம் செய்கின்றனர். பிறகு பெண்ணின் பெற்றோர், தமிழிடம் இருந்து ஸ்ரீலட்சுமியைப் பிரிக்கின்றனர். அவரை காணாத நிலையில் தமிழ், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கிறார். அப்போது ஸ்ரீலட்சுமி திரும்பி வர, தமிழ் என்ன முடிவு எடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ். ஆனால், ஷூட்டிங்கில் காதல் ஜோடி நிஜமாகவே காதலிக்கத் தொடங்கிவிட்டனர். இருவரது வீட்டிலும் எதிர்ப்பு. இதையடுத்து இந்த ஜோடி, சேலம் ரிஜிஸ்டர் ஆபீசில் பதிவு திருமணம் செய்துகொண்டது. இதுபற்றி தமிழிடம் கேட்டபோது, ''சம்பவம் உண்மைதான். எங்கள் வீட்டில் ஆதரவு கிடைத்துள்ளது. விரைவில் ஸ்ரீலட்சுமியின் வீட்டிலும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.


 

Post a Comment