திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சாயா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த விருந்து நிகழ்ச்சிக்கு வந்தார் சாயா சிங். பின்னர் பெங்களூர் திரும்பிய அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் சென்றார். பரிசோதித்த டாக்டர்கள் 'புட் பாய்சன்' ஏற்பட்டிருப்பதாகக் கூறினர். அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து பெங்களூர் கிறிஸ்டல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது உடல்நிலையில் முன்றேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சாயாசிங்கிடம் கேட்டபோது, ''சாதாரண காய்ச்சலாக நினைத்து சிகிச்சை எடுத்தேன். திடீரென நடக்க முடியாமல் போனபோதுதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். தீவிர சிகிச்சைப் பிரியில் மூன்று நாள் சிகிச்சை எடுத்தேன். இப்போது உடல் தேறிவருகிறது. இன்னும் சில நாட்களில் வீட்டுக்கு திரும்புவேன்'' என்றார்.
Post a Comment