தமிழில் வந்த 'மம்பட்டியான்' ரீமேக், தெலுங்கில் 'பெப்புலி' பெயரில் ரிலீசாகிறது. இதுகுறித்து பிரஷாந்த் கூறியதாவது: தமிழில் ரிலீசான 'மம்பட்டியான்', நல்ல பெயரைக் கொடுத்தது. 'பி' அன்ட் 'சி' ஏரியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தெலுங்கில் அடுத்த மாதம் ரிலீசாகும் இப்படத்துக்கு நானே டப்பிங் பேசியுள்ளேன். இதையடுத்து தமிழில் 3 இயக்குனர்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளேன். அதுகுறித்து அவர்களே விரைவில் அறிவிப்பார்கள். மீண்டும் அப்பா தியாகராஜன் டைரக்ஷனில் நடிக்க உள்ளேன். கதை விவாதம் நடக்கிறது. இப்படம் தொடங்குவதற்கு முன், மற்ற இயக்குனர்களின் படத்தில் நடித்து முடித்து விடுவேன். நடிப்பு தவிர, சினிமா தொழில்நுட்பங்கள் குறித்தும் தெரிந்துகொள்கிறேன். பிற்காலத்தில் நானும் படம் இயக்க, அது உதவியாக இருக்கும்.
Post a Comment