பாடலாசிரியர் விவேகா, நிருபர்களிடம் கூறியதாவது: இந்த வருடம் ஷங்கரின் 'நண்பன்' படத்தில் எழுதிய 'என் ஃபிரண்ட போல யாரு மச்சான்' பாடல் ஹிட்டாகியுள்ளது. தற்போது 'மாற்றான்', 'சிங்கம் 2', 'சகுனி', 'கரிகாலன்', 'அரவான்', 'வல்லினம்', 'இஷ்டம்' உட்பட 80 படங்களுக்கு பாடல் எழுதுகிறேன். ஒவ்வொரு பாடலையும் முதல் பாடலாக நினைத்தே எழுதுகிறேன். தமிழ்ப் பாடல்களில் ஆங்கில வார்த்தை கலப்பது பற்றி கேட்கிறார்கள். சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே இந்த விவாதம் தொடர்கிறது. ஒரு படத்தின் கதாபாத்திரம் ஸ்டைலாக இருக்கும்போது, பாடல் காட்சி மட்டும் தூயதமிழில் படமாக்கப்பட்டால் பொருத்தமாக இருக்காது என்று இயக்குனர்கள் நினைக்கிறார்கள். இது சரியான கருத்துதான். எனவே, தமிழ்ப் பாடல்களில் ஆங்கில வார்த்தை கலந்துவிடுகிறது. இதை தவிர்க்க முடியாது என்றே நினைக்கிறேன்.
Post a Comment