நகுலன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட பிந்து மாதவிக்கு புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத் தது. 'வெப்பம்' படத்தில் நடித்தவர் பிந்து மாதவி. தற்போது 'கழுகு' படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வரவுள்ளது. இதற்கிடையில் நகுலன் நடிக்கும் 'வல்லினம்' என்ற படத்தில் நடிக்க தேர்வானார். ஆனால் திடீரென்று நீக்கப்பட்டார். இந்நிலையில் தேசிய விருது வென்ற 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தை இயக்கிய சீனுராமசாமி இயக்கும் 'நீர்பறவை' என்ற படத்தில் நடிக்க தேர்வாகி இருக்கிறார். இதில் விஷ்ணு ஹீரோ. இதுபற்றி இயக்குனர் கூறும்போது, ''இப்படத்துக்கு மேலும் சில ஹீரோயின்கள் பரிசீலிக்கப்பட்டனர். ஆனால் பிந்து மாதவின் கண்கள் நான் எதிர்பார்க்கும் பாவங்களை வெளிப்படுத்துவதாக இருந்ததால் அவரை தேர்வு செய்தேன். இதன் ஷூட்டிங் இம்மாதம் 2வது வாரம் தொடங்க உள்ளது'' என்றார்.
Post a Comment