பிப்ரவர் 10-ல் கரீனா - சயீப் நிச்சயதார்த்தம்!

|


வயதாகும்வரை காதலர்களாகவே இருந்து விடுவார்களோ என்று கமெண்ட் அடிக்கும் அளவுக்கு பாலிவுட்டில் ரொம்ப நாளாகக் காதலித்துக் கொண்டிருக்கிற சபீப் அலிகானும் கரீனா கபூரும் ஒரு வழியாக நிச்சயதார்த்த தேதியை அறிவித்துள்ளனர்.

சயீப் அலிகானுக்கு 41 வயது. கரீனாவுக்கு 31 வயது. இருவரும் கிட்டத்தட்ட கணவன் மனைவி ரேஞ்சுக்குதான் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும், பேட்டி கொடுப்பதுமாக இருந்தார்கள். ஆனால் கல்யாணத்தைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. வெறுத்துப் போன இரு தரப்பு குடும்பத்தினரும், "அட, கல்யாணத்தைப் பண்ணித் தொலைங்கப்பா!" என வற்புறுத்த ஆரம்பித்துவிட்டனர்.

சயீப் அலிகான் ஏற்கனவே திருமணம் ஆனவர். முதல் மனைவியான நடிகை அமிர்தாசிங்கை 1991-ல் மணந்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2004-ல் விவாகரத்து செய்து கொண்டனர். இரண்டாவது மனைவியாகத்தான் கரீனா கபூர் போகிறார்.

கரீனா- சயீப் அலி திருமணம் மார்ச் 23-ந்தேதி நடக்கிறது. திருமண நிச்சயதார்த்தம் வருகிற 10-ந்தேதி நடக்கிறது. கபூர் குடும்ப வாரிசுகளில் ஒருவர் கரீனா கபூர். இவரது தந்தை ரந்தீர் கபூர் பெரிய நடிகர். மறைந்த இயக்குநர் / நடிகர் ராஜ் கபூரின் சகோதரர். கரீனாவின் அக்காதான் நடிகை கரிஷ்மா கபூர்.

மறைந்த கிரிக்கெட் வீரரும் பட்டோடி சமஸ்தான நவாபுமான மன்சூர் அலிகான் - நடிகை ஷர்மிளா தாகூர் மகன் இந்த சயீப். மன்சூர் அலிகானுக்குப் பிறகு சமஸ்தான வாரிசு சயீப் அலிகான்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment