புயல் நிவாரண நிதிக்கு முதல்வரிடம் கமல்ஹாசன் ரூ.15 லட்சம் வழங்கினார்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
புயல் நிவாரண நிதிக்காக முதல்வர் ஜெயலலிதாவிடம் நடிகர் கமலஹாசன் ரூ.15 லட்சத்தை இன்று வழங்கினார். தானே புயல் நிவாரண பணிக்காக தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள், பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் என பலரும் முதல்வரிடம் நிதி அளித்து வருகின்றனர். நடிகர் கமலஹாசன் இன்று காலை தலைமைச் செயலகத்துக்கு வந்தார். முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, நிவாரண நிதியாக ரூ.15 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

பின்னர், வெளியே நிருபர்களிடம் கமலஹாசன் கூறுகையில், தானே புயல் நிவாரண நிதிக்கு என்னாலான நிதியை வழங்கி உள்ளேன். இது சிறுதுளிதான் என்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பயன்படும் என்றார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பன்னீர் செல்வம் ரூ.20 லட்சத்துக்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினார்.


 

Post a Comment