நிழல்கள் ரவி 500 படங்களை தாண்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 1980ம் ஆண்டு 'நிழல்கள்' படத்தில் அறிமுகமானேன். சினிமாவில் 31 வருட அனுபவம் பெற்றிருக்கிறேன். ஹீரோவாக 60 படங்களில் நடித்திருக்கிறேன். பின் குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அதிகம் நடித்தது அப்பா வேடங்களில்தான். வில்லனாகவும் நடித்திருக்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 500 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். சமீபத்தில் வெளியான 'சூழ்நிலை' எனது 500-வது படம். தற்போது பத்து படங்கள் நடித்து வருகிறேன். படம் இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது.
Post a Comment