ஹேமமாலினியின் மகள் இஷா தியோல், தனது காதலரான பரத் தக்தனி என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளார். மும்பை தொழிலதிபர் பரத் தக்தனியும், இஷா தியோலும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார்கள். தற்போது இவர்களின் காதலுக்கு, இவர்களுடைய பெற்றோர்கள் பச்சை கொடி காட்டியுள்ளனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் (12-02-12) அன்று மும்பையிலுள்ள ஹேமமாலினியின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இவர்களுடன் பாலிவுட் பிரபலமான ஜெயா பச்சனும் கலந்து கொண்டார். இஷா தியோல் ஏராளமான இந்தி படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தமிழில் இயக்குநர் மணிரத்னம் படமான 'ஆய்த எழுத்து' படத்திலும் நடித்துள்ளார். இவர் பாலிவுட் பிரபலமான தர்மேந்திரா-ஹேமமாலினியின் மகள். இதனையடுத்து தனது நிச்சயதார்த்தில் வந்து வாழ்த்து தெரிவித்த அனைவரும் இஷா தியோல் நன்றி தெரிவித்துள்ளார்.
Post a Comment