தமிழில், 'நாடோடிகள்', 'சீடன்', 'எங்கேயும் எப்போதும்' படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மலையாள நடிகை அனன்யா. இவருக்கும் ஆஞ்சநேயன் என்பவருக்கும் கடந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆஞ்சநேயன் கேரளாவில் தொழில் அதிபராக இருக்கிறார். நிச்சயதார்த்தம் முடிந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில், ஆஞ்சநேயன் ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்திருப்பதாகவும் அதை மறைத்து மோசடியாக அனன்யாவை இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டதாகவும் அனன்யாவின் தந்தை கேரளாவில் உள்ள பெரும்பாவூர் போலீசில் புகார் அளித்ததாகவும் கேரளாவில் பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. ஆஞ்சநேயன் இன்னொரு திருமணம் செய்திருந்தாலும் அவரை மணமுடிக்க அனன்யா பிடிவாதமாக இருப்பதால் அவரை அவர் பெற்றோர் வீட்டுச்சிறையில் வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் பரபரப்பு பற்றி, தினகரன் நிருபரிடம் அனன்யா கூறியதாவது: இது முழுக்க முழுக்க கட்டுக் கதை. எனது திருமணத்தை பிடிக்காதவர்கள் யாரோ கிளப்பிவிட்ட புரளியாகத்தான் இது இருக்கும். என்னை யாரும் சிறை வைக்கவில்லை. எனது வீட்டில் சுதந்திரமாகத்தான் இருக்கிறேன். இதுகுறித்து வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. ஐந்து படங்களில் நடித்து முடிக்க வேண்டியிருக்கிறது. அதற்குபிறகு கண்டிப்பாக எங்கள் திருமணம் நடக்கும். இவ்வாறு அனன்யா கூறினார்.
Post a Comment