நான் ஒரு இந்தியன், இங்கிலிஷ்காரன் இல்லை

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஒய் திஸ் கொலவெறிடி' பாடல் மூலம் ஒரே நாளில் சர்வதேச அளவில் பிரபலம் ஆனது எப்படி என்று மேனேஜ்மென்ட் கல்லூரி மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார் தனுஷ். தனுஷ் நடிக்கும் படம் '3'. மனைவி ஐஸ்வர்யா இயக்குகிறார். ஸ்ருதி ஹாசன் ஹீரோயின். இப்படத்துக்காக 'ஒய் திஸ் கொலவெறிடி' என்ற பாடலை சொந்த குரலில் பாடினார் தனுஷ். இது அவருக்கு எல்லைகளை கடந்து சர்வதேச அளவில் புகழை பெற்றுத் தந்துள்ளது. ஒரே பாடல் மூலம் பிரபலம் ஆனது பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இதையடுத்து வெவ்வேறு இடங்களில் நடக்கும் நேரடி நிகழ்ச்சி யில் பங்கேற்றார். பொழுதுபோக்கு விழாக்களில் மட்டுமே பங்கேற்று வந்த தனுஷுக்கு தற்போது கல்வி நிறுவனங்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. அகமதாபாத்தில் இயங்கி வரும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரி யில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று கல்லூரில் அவர் பாடம் எடுக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது,"இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) கல்லூரியில் என்னை பேச அழைத்திருக்கிறார்கள். எனக்கு நல்ல முறையில் இங்கிலிஷ் பேசத் தெரியாது. ஆனாலும் அதைப்பற்றி யார் கவலைப்படுகிறார்கள். நான் ஒரு இந்தியன், இங்கிலிஷ்காரன் இல்லை" என்றார்.


 

Post a Comment