வெப்சைட் வைத்துள்ள அசின்

|

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
எல்லோரையும் 'அண்ணா' என்று அழைப்பது அசினின் வழக்கம். காரணம், வீட்டில் அவர் மட்டுமே செல்லக்குட்டி. உடன் பிறந்தவர்கள் கிடையாது. தன்னுடன் ஜோடி சேர்ந்த சில ஹீரோக்களையும் 'அண்ணா' என்றே அழைப்பார். எங்கே நம்மையும் இப்படி சொல்லிவிடுவாரோ என்று, ஒருசிலர் முன்னெச்சரிக்கையுடன் ஓட்டம் பிடித்த சுவாரஸ்யமும் உண்டு.

பிளாக் அன்ட் ஒயிட்டில் இருக்கும் தன் சின்ன வயதுப் படங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் அசின், அவ்வப்போது அந்த போட்டோக்களை எடுத்துப் பார்த்து, பிளாஷ்பேக்கில் மூழ்கிவிடுகிறார்.

மும்பையில் ஸ்ரீதேவியின் பங்களாவுக்கு அருகிலேயே அசினுக்கு சொந்த வீடு இருக்கிறது. இதனால், ஸ்ரீதேவியின் இரு மகள்களும் அசினுக்கு நெருக்கமான தோழிகளாகி விட்டனர். ஷூட்டிங் இல்லாத நாட்களில் அவர்களுடன் அரட்டையடிப்பதும், ஸ்ரீதேவியிடம் மேக்கப் மற்றும் டயட் சம்பந்தமாக டிப்ஸ் கேட்பதும் அசினின் வழக்கம்.

ஆன் லைனில் தனக்கென ஒரு வெப்சைட் வைத்துள்ள அசின், சினிமா மற்றும் விளம்பரத்துறையில் தன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி அதில் பதிவு செய்துள்ளார். மேலும், பிரபலமான பத்திரிகைகளில் தன்னைப்பற்றி வரும் 'நல்ல செய்தி'களை ஸ்கேன் செய்து பதிவேற்றுகிறார்.

அசின் சரியான வஞ்சிர மீன் பிரியை. தோல் நீக்கி பதப்படுத்திய வஞ்சிரத்துடன் மசாலா கலந்து 'பிரை' செய்து கொடுத்தால், அளவில்லாமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார். தவிர, 'சமையலறை ராணி' பட்டத்துக்கும் பொருத்தமானவர். சிக்கன் பிரைடு ரைஸ், நூடுல்ஸ், பலாப்பழம் பாயசம் செய்வதில் எக்ஸ்பர்ட்.



 

Post a Comment